மதுரை:மதுரை மாவட்டம் மேலூர், கருத்தப்புளியம்பட்டியில் உள்ள ஏ24 பி.எம்.ஏ.ஒய் நகர்ப்புற வீட்டைச் சேர்ந்த ராசு மகன் திரு. அறிவுழகன் (38). என்பவரின் மின் அளவை 22 கிலோவாட்டிலிருந்து 3 கிலோவாட்டாகக் குறைக்க, ரூ.7,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி சிக்கினார். மேலூர் நகர தமிழ்நாடு மின்பகிர்மான கழக (TNPDCL) உதவிப் பொறியாளர் அலுவலக வணிக ஆய்வாளரான திரு. எஸ். ஆனந்த் (48, த/பெ சுப்பிரமணியன்), புகார்தாரரின் விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க இந்த லஞ்சத் தொகையைக் கேட்டுப் பெற்றுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைத்த பொறியின் போது, மேற்கண்ட அலுவலகத்தில் வைத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவர் கேட்டு இடது கையால் பெற்றார்; பின்னர் அதனைத் தனது இடது பக்க பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்தபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்


















