கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஜி. எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் நேரில் சென்று மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் (Good Touch & Bad Touch), போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர். மேலும், மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டையும் சமமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொண்டு, தன்னம்பிக்கையுடன் வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுரைகள் வழங்கினர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















