திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வேலை பார்த்து வந்த (17). வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வத்தலகுண்டு, கணவாய்பட்டியை சேர்ந்த பாண்டியன் மகன் புவனேஸ்வரன்(23). என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள், புவனேஸ்வரனுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புவனேஸ்வரனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















