தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.பி.யாகப் பணியாற்றி, பல்வேறு சீர்திருத்தப் பணிகள் மற்றும் சட்டம்–ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தென்காசி மாவட்ட எஸ்.பி.யாகப் பணியாற்றிய அசோக்குமார், மதுரை பயங்கரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு ச.மூவேந்திரன்




















