கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை உட்கோட்டத்திற்குட்பட்ட மத்தூர் காவல் நிலைய மற்றும் பர்கூர் உட்கோட்டம், போச்சம்பள்ளி காவல்நிலைய எல்லைப் பகுதிகளில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி.எஸ். அனிதா அவர்களின் உத்தரவின் பேரில் (28.10.2026) குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் காவல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு நாகம்பட்டி மற்றும் K. மோட்டூர் ஆகிய இடங்களில் நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடம் குற்றங்களைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தும் வகையில் தீவிர கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















