நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் பதிவான இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி கோடீஸ்வரனுக்கு, நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் இரண்டு ஆயுள் சிறைத் தண்டனைகளும், ரூ.18,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு மேற்கொண்ட புதுச்சத்திரம் காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.




















