நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், வேலூர் உட்கோட்டம், பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நாமக்கல் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்வழக்கில் சிறப்பாகப் புலனாய்வு மேற்கொண்டு, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தருவதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.




















