கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷுல் நாகர், IPS., அவர்களின் உத்தரவின்பேரில், இன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இச்சோதனையின்போது வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந்த வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.



















