கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி.எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், இன்று (30.10.2026) குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு, கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களிடம் குற்றச் செயல்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர்.



















