திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையம் அருகே குமார் என்பவரின் உணவு விடுதியில் தோமையார்புரத்தை சேர்ந்த ஆரோக்கியதாஸ்(36). ஆரோக்கியசாமி(35). நரசிங்கபுரத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(30). ஆகியோர் சாப்பிட்டுவிட்டு உரிமையாளர் குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர் இதனைத்தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சந்திரசேகர் என்பவர் தகராறு தடுக்க முற்பட்டார் அப்போது தகராறு ஈடுபட்ட 3 பேரும் சந்திரசேகரை தாக்கி மண்டையை உடைத்தனர். இது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன், சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















