திண்டுக்கல்: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம்,பாப்புலர் நகரை சேர்ந்த ஜெயசீலன்(42). இவரது மனைவி காளீஸ்வரி(38). இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை கணவர் ஜெயசீலன் மனைவி காளீஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தலைமறைவாக இருந்த கணவர் ஜெயசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















