தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, திருட்டில் தொடர்புடைய வெளிமாநில நபரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகளை மீட்டனர்.




















