திருநெல்வேலி: திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள், குளச்சல் உட்கோட்டம், புதுக்குடி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, காவல் நிலையத்தின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.




















