திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள மாநகராட்சி மைய அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையில் காவல் ஆய்வாளர், ராபின் ஞானசிங் குழுவினர் (03.07.2026) பிற்பகல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இரவு வரை நீடித்த சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.97ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 10 போ் மீது மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















