திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய்,இ.கா.ப., உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுக்க தனிப்படை காவலர்கள் தொடர்ந்து மாநகரில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி (02.08.26) அன்று பாளையங்கோட்டை, வெள்ளக்கோவில் பகுதியில் தனிப்படையினர் ரோந்து பணியின் போது, சந்தேகமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த சிலரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள், பாளையங்கோட்டை, அருள்நகரைச் சேர்ந்த ஜோஸ்வா பிஜூ ஆரோன் (29). அந்தோணி ஜீசஸ் ஆல்வின் (29). தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையைச் சேர்ந்த ஆனந்தபாலன் (31). ஏரலை சேர்ந்த பாலகௌதம் (25). பாளையங்கோட்டை முருகன் குறிச்சியைச் சேர்ந்த நெல்சன் பால்துரை (27). என்பது தெரிய வந்தது.
அவர்கள் காரில் 150 கிராம் கஞ்சா, உயர்ரக போதைப் பொருளான 10 பாக்கெட் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்ததால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதைப்பொருள் விற்பனையில் தொடர்பு கொண்ட பாளையங்கோட்டையைச் சேர்ந்த இசக்கி முத்துவையும்(27). கைது செய்து அவரிடமிருந்து (27). உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கி, 3 தோட்டாக்கள், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















