திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்தவர் பீர் முகமது (30). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால்
இவருக்கு திருநெல்வேலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜனவரி மாதம் மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்தபோது பீர் முகம்மது அங்கிருந்து தப்பி ஓடிய வழக்கிலும் அவரை தேடிவந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பீர் முகமதுவை மேலப்பாளையம் காவல்துறையினர் (03.07.2026) அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















