திருநெல்வேலி: திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் தேரோட்டம் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, இந்து சமய அறநிலையத் துறை, அனைத்து அரசு துறைகள், ஊடக நண்பர்கள், தன்னார்வலர்கள், விழா பணிகளில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்கள், மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆகிய அனைவருக்கும் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பான மற்றும் சிறப்பான தேரோட்டத்திற்கு உறுதுணையாக இருந்தது. மக்கள் பாதுகாப்பே எங்கள் முதன்மை பணியாகும் என மாநகர காவல் துறை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















