சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு பகுதியான காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் அமைந்துள்ள பிரபல ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11வது பட்டமளிப்பு விழா , ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு கனிமவளத் துறை மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
ஸ்ரீ இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா அவர்கள் தலைமையெற்று , தனது தலைமை உரையில் தேர்வில் வெற்றி பெற்று பட்டங்களைப் பெறும் மாணவர்கள் அனைவரும் வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த சமூகத்திற்குப் பயன்படும் வகையில் நேர்மையாகவும் , சாதனையாளர்களாகவும் உருவாக வேண்டும் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசின் மாண்புமிகு கனிமவளத் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் பெரிதாகக் கனவு காண வேண்டும் என்றும், தோல்வியைக் கண்டு அஞ்சாமல், விடாமுயற்சியுடன் செயல்பட்டு , வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேலும் பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் பட்டைத்தீட்டும் வைரம் போல வாழ்வில் ஒளிர வேண்டும் என்று வாழ்த்தினார். பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் NCTE உறுப்பினர் முனைவர் C.கீதாலெட்சுமி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். ஸ்ரீ இராஜ ராஜன் கல்வியியல் கல்லூரிகளின் 16வது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி திருமதி.M. மகரஜோதி விக்னேஷ் அவர்களுக்கு நாகாடி சுப்பிரமணியன் – அழகு நினைவு விருது, தங்கப்பதக்கம் மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டது. மேலும் கல்வியியல் கல்லூரிகளில் கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் , விருதுகளும் வழங்கப்பட்டது.
முன்னதாக ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் A.முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றி ஆண்டறிக்கையை வாசித்தார். பட்டமளிப்பு விழாவில் 150 பொறியியல் கல்லூரி மாணவர்களும் , 200 கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராஜ ராஜன் மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் R.சிவக்குமார், இருபாலர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் K.அங்கயற்கண்ணி, பொறியியல் கல்லூரியின் டீன் M.சிவக்குமார், துணை முதல்வர் V.மகாலிங்க சுரேஷ், தேர்வு கண்காணிப்பாளர் முனைவர் N.இராஜேஸ்வரி, பல்வேறு துறை தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















