சென்னை: சென்னையில் (11.08.2026) மாநிலக் கல்லூரியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக மதுரை மாநகரத்தில், அமெரிக்கன் கல்லூரியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் திரு.எஸ்.ராஜேந்திரன்,இ.கா.ப., அவர்கள், சென்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ந.தேவநாதன் அவர்கள், மாநகராட்சி மேயர் (பொ)/துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.கௌரவ் குமார், இ.ஆ.ப., அவர்கள், மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.அன்பழகன் அவர்கள், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி, பள்ளி மாணவ,மாணவிகள், தன்னார்வலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
பின்னர் நடந்த நிகழ்ச்சியில்: மதுரை மாவட்டத்தில் போதை எதிர்ப்பு குழுக்கள் (Anti Drug clubs), தன்னார்வ குழுக்கள் (Volunteering Team NCC/NSS) ஆகியோர் நன்முறையில் செயல்பட்டதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் கேடயம் மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை சிறந்த முறையில் ஒருங்கிணைத்து செயல்படுத்தியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள். மேலும் மதுரை மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















