சென்னை: அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சியில் உள்ள செவிலியர்களை காவல்துறையினர் நேரில் சந்தித்து, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கினர். பாதுகாப்பு குறைபாடு அல்லது அவசரத் தேவை ஏற்படும் நேரங்களில் உடனடியாக காவல்துறை உதவியைப் பெறுவதற்கான தொடர்பு எண்கள், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து செவிலியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. செவிலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசர நேரங்களில் விரைவான காவல் உதவியைப் பெறுவதற்கும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















