திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் குஜிலியம்பாறை, வடுகம்பாடியை சேர்ந்த அய்யப்பன் மகள் கயல்விழி(27). என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் மன உளைச்சல் காரணமாக டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் உள்ள ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை காவல்துறையினர் கயல்விழியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















