திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை, சின்னையாகவுண்டன்வலசு, எல்லைபாறைகுளம் பகுதியில் கஞ்சா பதுக்கல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா ரூ.2 லட்சம் பணம் 4 வாகனங்கள் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த கஞ்சா கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு தங்கச்சியம்மாபட்டி பகுதியில் தலைமறைவாக பதுங்கி இருந்த திண்டுக்கல், பொன்னிமாந்துறை புதுப்பட்டியை சேர்ந்த குருநாதன் மகன் காடு(எ) அன்பழகன்(28). என்பவரை அம்பிளிக்கை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















