திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படையில் பயன்பாட்டில் இருந்து கழிவு செய்யப்பட்ட 20 வாகனங்கள் வருகின்ற (10.12.2026)-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து பொது ஏலம் விடப்பட உள்ளது. இந்த பொது ஏலத்தில் 5 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 15 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. மேற்கண்ட பொது ஏலத்தில் கலந்து கொண்டு இரண்டு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஏல முன்பணமாக ரூ.1,000/-ம், நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் ஏல முன்பணமாக ரூ.5,000/-ம் செலுத்தி அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டுகள் (08.12.2026)-ம் தேதி காலை 10.00 மணி முதல் (09.12.2026)-ம் தேதி மாலை 5.00 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வழங்கப்படும்.
ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முன்பணத்தை செலுத்தி அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும், பொது ஏலத்தில் வாகனத்தை ஏலம் எடுக்கும் நபர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவீத GST வரியையும் சேர்த்து முழுத் தொகையையும் செலுத்தி, ஏலத்தில் எடுத்த வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். பொது ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 83000-02842 மற்றும் 83000-02802 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் இந்த பொது ஏலத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















