மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம், அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில், மதுரை சிறப்பு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. அலங்காநல்லூர் கரட்டு காலணியைச் சேர்ந்த முனியாண்டி மகன் வெள்ளையன்(75). என்பவரும் குற்றவாளி ஈஸ்வரி என்பவரும் அருகருகே குடியிருந்த வந்த நிலையில் இருவருக்கும் குப்பைகளை கொட்டுவதில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவ நாளன்றுகுற்றவாளி ஈஸ்வரி என்பவர் இறந்த வெள்ளையன் என்பவர் வீட்டின் முன்பு குப்பைகளை கொட்டி எச்சில் தண்ணீரை ஊற்றியது சம்மந்தமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வெள்ளையன் தன் வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தவர் மீது குற்றவாளி ஈஸ்வரி என்பவர் கொதிக்கும் சுடு தண்ணீரை ஊற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஈஸ்வரி (65, க/பெ. மரியதாஸ்), 1-வது வார்டு, கரட்டு காலணி, அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் (நாடார்) என்பவர் கைது செய்யப்பட்டு வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இவ்வழக்கின் புலனாய்வுப் பணிகளை சமயநல்லூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு.ஆனந்தராஜ் மற்றும் நீதிமன்ற பெண் தலைமைக் காவலர் 420 திருமதி.மனோரஞ்சிதம் ஆகியோர் மிகச் சிறப்பாக மேற்கொண்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
(22.09.2026)-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றவாளி ஈஸ்வரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து தீர்ப்பை வழங்கினார். அதன்படி, 1 ஆயுள் சிறை தண்டனையும் ரூ. 1,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்ட காவல்துறை, கொலை உட்பட கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தந்து தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















