திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு, எருமநாயக்கன்பட்டி சேர்ந்த கணேசன் மகன் கங்கேஸ்வரன்(21). செம்பட்டி, வீரக்கலை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் பெத்தன்ராஜ்(19). ஆகிய இருவரும் பட்டாகத்தியுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டனர். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பட்டாகத்தியுடன் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்ட கங்கேஸ்வரன், பெத்தன்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















