திண்டுக்கல்: வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (15). வயது சிறுமிக்கு வேடசந்தூர் திருமாணிக்கனூரை சேர்ந்த வேன் டிரைவர் ராஜ்குமார்(36). என்பவர் தன்னுடன் பேசி பழகுமாறு கூறி தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அச்சமடைந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்கள் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்தமிழ்செல்வி, சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தொல்லை கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















