திண்டுக்கல்: திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (14). வயது சிறுமியை செல்லமந்தாடி, RVS- நகரை சேர்ந்த கனகபாண்டி(28). என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரெய்கானா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு கனகபாண்டியை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















