திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடிய நிலவை அகாடமி கபடி அணி வீராங்கனை செல்வி. விஜி, தனது திறமையான ஆட்டத்தின் மூலம் மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இது நிலவை அகாடமியின் விளையாட்டு மேம்பாட்டுப் பணிகளுக்கும், மாணவ–மாணவியர்களின் விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கான தொடர் முயற்சிகளுக்கும் கிடைத்துள்ள ஒரு முக்கியமான ஊக்கமாகும். செல்வி. விஜி , நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பி.பி.ஏ மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
அவரது இந்த வெற்றியைப் பாராட்டி, 1977 நிலக்கோட்டை பள்ளி நண்பர்கள் குழுவின் சார்பாக இரா. கண்ணன் , செல்வி. விஜிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர் மாநில அளவிலான போட்டியிலும் சிறப்பாக விளையாடி, தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற வேண்டும் என, வாழ்த்தியுள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















