திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அடியனூத்து, கண்ணார்பட்டி பிரிவு பாலம் அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாக்கத்தியை தலைக்கு மேல் தூக்கி சுற்றிக் கொண்டிருந்த நல்லாம்பட்டியை அடுத்த யாகப்பன்பட்டி பரிவு பகுதியை சேர்ந்த உதயா(எ) உதயகுமார்(31). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக்கத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















