புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜா.முகமது பர்வேஸ் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மருதுபாண்டியர் நகரில் 100 கே.வி. மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
மேலும், குன்னாண்டார்கோவில் கிள்ளனூர் ஊராட்சி வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர், 9A நத்தம் பண்ணை தெய்வானை நகர் குளத்தை தூர்வாரி, அங்கு நடைப்பயிற்சி பாதை அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அன்னவாசல் பேரூராட்சி குப்பைக் கிடங்கு மற்றும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கான மாற்று இடம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், அன்னவாசல் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் இலுப்பூர் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி
















