மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்
பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்க துவக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு பேரூராட்சித் தலைவர்
மு. பால்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜ மார்த்தாண்டன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, தலைமை ஆசிரியர் திலகவதி,கவுன்சிலர் ஜெயகாந்தன் உட்பட மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில், உதவியாளர் பிரகதீஸ்வரன்
நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















