சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காலனிவசலை சேர்ந்த கா.ஜெகநாதன் (79 வயது) அவர்களின் உடல், அன்னாரது விருப்பப்படியே முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்கு உதவும் வகையில், அவரது மகளால் அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. இந்த மனிதநேயமிக்க செயலைப் பாராட்டி, மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அவரது குடும்பத்தினருக்குச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வின் போது துணை முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















