சென்னை: கோயம்பேடு போக்குவரத்து காவல் குழுவினர் சார்பில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் போது, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்றும், வாகனங்களில் பயணிக்கும் போது போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தினர். மேலும், சாலை விதிகளை மீறாமல் பொறுப்புடன் வாகனங்களை இயக்குவதன் மூலம் விபத்துகளைத் தவிர்த்து, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் வலியுறுத்தினர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















