கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு சார்பில், பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் (11.08.2026) குருபரப்பள்ளியில் சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி (Walkathon) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா, அவர்கள் தலைமையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு S. நமசிவாயம் அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு T. ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்
.மேலும், இணையவழி மோசடிகள், வங்கி கணக்கு மோசடிகள், OTP பகிர்வு, போலி முதலீட்டு திட்டங்கள் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 உதவி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.“சைபர் குற்றங்களை தடுப்போம் – பாதுகாப்பான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவோம்!




















