கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஐந்து உட்கோட்டங்களிலும் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் மினி மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி. G.S. அனிதா, அவர்கள் (10.08.2026) பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.




















