திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த ஜக்கம்பட்டியை சேர்ந்த மல்லிகா(72). என்பவரிடம் கடந்த 5-ம் தேதி மர்ம நபர் மின்வாரிய ஊழியர் என்று கூறி மின் மீட்டர் அளவீடு எடுக்க வந்திருப்பதாக தெரிவித்து மல்லிகாவிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி மர்ம நபர் பறித்து சென்றார். இது குறித்து குஜிலியம்பாறை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கரூர், வெள்ளாளப்பட்டி, வடக்கு பாளையத்தை சேர்ந்த ராஜேஷ்குமாரை(40). கைது செய்து
அவரிடமிருந்து 3 பவுன் தங்க செயினை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















