தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வாகன தணிகையின் போது மேற்கொண்ட தீவிர சோதனையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்த வேல்முருகன் (49). மற்றும் ரமேஷ் (47). ஆகியோர் கைது செய்யப்பட்டார். சோதனையின்போது ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள 600 கிலோ புகையிலை பொருட்கள், ரூபாய் 7½ லட்சம் ரொக்க பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன. எதிரிகள் மீது COTPA Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




















