தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த செல்வ சதீஷ் (26). லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த மூர்த்தி (26), செல்சீனி காலனியைச் சேர்ந்த வினோத் (23) ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 3 அரிவாள்கள் மற்றும் கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக NDPS சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.




















