கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்கள் தலைமையில், வருகின்ற திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் லாரிகளுக்கான போக்குவரத்து மாற்றம் (Diversion) தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகளை நேரில் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், போக்குவரத்து மாற்றம் குறித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொதுமக்கள் மற்றும் தீபத் திருவிழாவிற்குச் செல்லும் பக்தர்களின் பயணம் தடையின்றி, பாதுகாப்பாக அமைய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















