புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற வாகனத்தை இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று, கடத்தலில் ஈடுபட்ட நபரைப் பிடித்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உதவியாக இருந்த இரு காவலர்களையும், இன்று (19.11.2026) புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரவீந்திர குமார் குப்தா இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்துப் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கினார்கள்.




















