திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் ஹரிஹரன் பஜார் வீதி,தேரடி தெரு, தாயுமான் செட்டி தெரு ஆகிய பகுதிகளில் பொன்னேரி நகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்கள்,கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 356 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூபாய் 30,000 அபராத தொகையும் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது பொன்னேரி நகராட்சி ஆணையர் நளாயினி, சுகாதார ஆய்வாளர் சாமுவேல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















