மதுரை: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி 3-வது வார்டு பசும்பொன் நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற சர்வேயர் கண்ணாயிரம் பிள்ளை வீட்டின் மாடியில் இன்று மதியம் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் இருந்த பொருட்கள், பீரோ, டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. தீயை அணைக்க முயன்ற கண்ணாயிரம் பிள்ளைக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. பழுதடைந்த மின் கம்பிகளை உடனடியாக மாற்றி, மின்விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















