கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பணந்தூர் காவாய் கொல்லை வெங்க புளியங்கொட்டாய் பகுதியில், வீட்டின் முன்பு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் விற்பனைக்காக மதுபானங்களை வைத்திருந்த நபரை கைது செய்து, மதுபானங்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















