கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலாக்கப்பட்டி புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக மதுபானங்களை வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்து, மதுபானங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















