திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அரியபித்தன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு மண்வெட்டி பிடியால் அடித்து கொலை செய்த சரோஜா மற்றும் பொன்னுவேலை வேடசந்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் பாலாஜி ஆகியோரின் முயற்சியால் இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே ராஜகோபாலன் அவர்கள், குற்றவாளிகள் சரோஜா மற்றும் பொன்னுவேல் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















