திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அறிவு திருக்கோயில் பகுதியில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி, தாடிக்கொம்பு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி மற்றும் காவலர்கள் அறிவு திருக்கோயில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் வீட்டில் அழகிகளை வைத்து பாலியல் தொழில் செய்த அனிதா(எ) முத்துலட்சுமியை கைது செய்து அங்கிருந்து 2 அழகிகளை மீட்டு தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















