இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட ஊர்க்காவல் படைப் பிரிவில் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பணியாற்றி வரும் 9 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நீண்டகால சேவையைப் பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.



















