இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டம், பரமக்குடி நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் அனிஷ்குமார் (த.கா.2027) என்பவர், கடந்த (13.11.2026) பணியின்போது தனது கடமைகளை சரிவர மேற்கொள்ளாமல் கவன குறைவாக செயல்பட்டுள்ளதால் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவல்துறையில் காவலர்கள் யாரேனும் பணியின்போது இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















