சென்னை: தமிழ்நாட்டின் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் டாக்டர் டி.கே. பிரபு, தனக்கு ஒதுக்கப்பட்ட துறையைச் சிறப்பாகவும் திறம்படவும் நிர்வகித்து வருவதற்காகப் பாராட்டு பெற்றுள்ளார். மேலும், சிவகங்கை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராகப் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டு வருவதையும், சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில், இரவு பகலாக அடிப்படை வசதிகளைச் சீரமைக்கும் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டதையும் பாராட்டி, தமிழக முதலமைச்சர் டாக்டர் சி. ஜோசப் விஜய் அமைச்சர் டி.கே. பிரபுவைப் பாராட்டினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















