இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், (13.11.2026) காலை 09.30 மணியளவில், பட்டினம்காத்தான் சன்ஷைன் மஹாலில், இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுத்தல், (21). வயதிற்குட்பட்ட நபர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என்பதை உறுதி செய்தல், அரசு நிர்ணயித்த நேரங்களில் மட்டுமே மதுபானக் கடைகளைத் திறந்து செயல்படுதல், கடைகளில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். மேலும், மதுபானக் கடைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் செயல்படுவதுடன், கடைகளுக்கு அருகில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தகராறுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















